ரூ.84,328 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல் - ராணுவ அமைச்சகம் ஒப்புதல்

கோப்புப்படம்
முப்படைகள் மற்றும் கடலோர காவல்படைக்கு ரூ.84,328 கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது.
புதுடெல்லி,
முப்படைகள் மற்றும் கடலோர காவல்படைக்கு ரூ.84 ஆயிரத்து 328 கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் இதற்கு ஒப்புதல் அளித்தது.
இலகுரக டாங்கிகள், கப்பலை தகர்க்கும் ஏவுகணைகள், நீண்ட தூரம் சென்று தாக்கும் குண்டுகள், காலாட்படை போர் வாகனங்கள், புதிய தலைமுறை ரோந்து படகுகள் ஆகியவையும் கொள்முதல் செய்யப்படும் தளவாடங்களில் அடங்கும்.
சீன எல்லையில் சீன படைகளுடன் மோதல் நடந்த நிலையில், இந்த பொருட்கள் வாங்கப்படுகின்றன.
Related Tags :
Next Story