ரூ.7,800 கோடி ராணுவ தளவாடங்கள் கொள்முதல் - ராணுவ அமைச்சகம் ஒப்புதல்

கோப்புப்படம்
ரூ.7,800 கோடி ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்ய ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி,
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் இயங்கி வருகிறது. முப்படைகளுக்கு தேவையான ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதே இதன் நோக்கமாகும். இதற்கான கூட்டம் டெல்லியில் வைத்து நடந்தது.
அதில் ரூ.7,800 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாராகும் தளவாடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்குவது, சிறிய ரக எந்திர துப்பாக்கிகளை கொள்முதல் செய்தல், விமானப்படையின் செயல்திறனை அதிகரிக்கும் வகையிலான தளவாட பொருட்கள், ராணுவ பீரங்கிகள் உள்ளிட்டவை அதில் அடங்கும்.
Related Tags :
Next Story






