தலைநகர் டெல்லியில் 3வது நாளாக கடுமையான காற்று மாசு


தலைநகர் டெல்லியில் 3வது நாளாக கடுமையான காற்று மாசு
x

ஆரோக்கியமான மனிதர்களுக்கும்கூட இந்த காற்று மாசுபாட்டால் நுரையீரல் புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த மாசு படிப்படியாக அதிகரித்து கடுமையான நிலையை எட்டியிருக்கிறது. இன்று காற்றின் தரக் குறியீடு (AQI) 504 என பதிவாகியுள்ளது. இந்த வாரத்தில் மூன்றாவது நாளாக இந்த கடுமையான காற்று மாசு பதிவாகியிருக்கிறது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மாசு அடைந்த காற்று வெளியில் செல்ல வழியில்லாததால் வானில் அடுக்குகளாக காணப்படுகிறது. வசந்த் குஞ்ச், சிக்னேச்சர் பாலம் போன்ற பல இடங்களில் அடுக்கடுக்காக மூடுபனி போன்று காணப்படுகிறது. இதைத்தொடர்ந்து டெல்லியில் டீசல் வாகனங்கள் அதிக அளவில் இயங்க தடைவிதித்துள்ளனர் .

இதுதொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகையில், ஆரோக்கியமான மனிதர்களுக்கும்கூட இந்த காற்று மாசுபாட்டால் நுரையீரல் புற்று நோய், நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தனர்.

தற்போது டெல்லியை போலவே நொய்டாவிலும் காற்றின் தரக் குறியீடு (AQI) 576 என்ற அளவில் உள்ளது. நொய்டாவின் செக்டர்-116 மற்றும் செக்டர்-62 ஆகிய பகுதிகளில் முறையே 426 மற்றும் 428 ஆக காற்றின் தரம் இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.


Next Story