டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: எந்த மாநில அரசும் விவசாயிகளை குறை சொல்ல முடியாது - மனித உரிமைகள் ஆணையம்


டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: எந்த மாநில அரசும் விவசாயிகளை குறை சொல்ல முடியாது - மனித உரிமைகள் ஆணையம்
x

விவசாயிகளுக்கு போதுமான இயந்திரங்களை வழங்க மாநில அரசுகள் தவறிவிட்டன.தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இல்லை.

புதுடெல்லி,

டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) நேற்று முன் தினம் டெல்லி, பஞ்சாப், அரியானா, உ.பி., ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது.

இந்த கூட்டத்தில் கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

எந்த மாநிலமும் விவசாயிகளை குறை சொல்ல முடியாது. இது மாநில அரசுகளின் தோல்வி. விவசாயிகளுக்கு போதுமான எண்ணிக்கையிலான இயந்திரங்களை வழங்க மாநிலங்கள் தவறிவிட்டன. தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இல்லை.

அதன் காரணமாக விவசாயிகள் வேறு வழியின்றி வேளாண் கழிவுகளை எரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன் காரணமாக டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்றில் நச்சுத்தன்மை மேலும் அதிகரித்தது. டெல்லி, பஞ்சாப், அரியானா, உ.பி., ஆகிய மாநிலங்களில் வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவதால், காற்றில் பெரும் மாசு ஏற்படுகிறது.

நவம்பர் 18ஆம் தேதி அடுத்த விசாரணைக்கு தலைமைச் செயலாளர்கள் மீண்டும் ஆஜராக வேண்டும்.தலைமைச் செயலாளர்கள் நான்கு நாட்களுக்குள் தங்கள் பதில்களை சமர்ப்பிக்க வேண்டும், மாநில அரசுகள் நான்கு வாரங்களுக்குள் தங்கள் பதில்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story