டெல்லி : சுப்ரீம் கோர்ட்டு வளாக வங்கியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு..!!

Image Courtesy : PTI
தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் உள்ள வங்கியில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
5 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரத்திற்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தீ விபத்து நடந்த சமயத்தில் வங்கி அடைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து டெல்லி போலீசார் முதல் கட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story






