நீட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிய மனு; தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்


நீட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிய மனு;  தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்
x

நடப்பாண்டில் மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

நடப்பாண்டில் மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டுகள் தற்போது டவுன்லோடு செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் 15 மாணவர்கள் மனுத் தாக்கல் செய்தனர்.இந்த மனுவில், நீட் நுழைவுத் தேர்வை 3 அல்லது 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது திட்டமிட்டபடி, ஜூலை 17-ந் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று உத்தரவிட்டு அனைத்து மனுக்களையும் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும் வழக்கு தொடர்ந்தது மாணவர்கள் என்பதால் அபராதம் விதிக்காமல் தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


Next Story