டெல்லி அரசின் வீட்டுக்கே சென்று ரேஷன் வழங்கும் திட்டம் ரத்து- டெல்லி ஐகோர்ட்டு


டெல்லி அரசின் வீட்டுக்கே சென்று ரேஷன் வழங்கும் திட்டம் ரத்து- டெல்லி ஐகோர்ட்டு
x

வீடுதோறும் ரேஷன் பொருள்களைக் கொண்டுசென்று விநியோகிக்கும் திட்டத்தை தில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஆளும் ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு தரப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

குறிப்பாக மாநில அரசின் இந்த திட்டத்தால் ரேஷன் கடைகள் அடைக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக ரேஷன் கடை உரிமையாளர்கள் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்து கடந்த ஜனவரி 10-ந்தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், டெல்லியில் வீடுகளுக்கே சென்று ரேஷன் வழங்கும் அரசின் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். பொறுப்பு தலைமை நீதிபதி விபின் சங்கி தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பில் மேலும் கூறுகையில், வீடுகளுக்கே சென்று வழங்கும் மற்றொரு திட்டத்தை டெல்லி அரசு செயல்படுத்தலாம் என்றும், ஆனால் மத்திய அரசு வழங்கும் உணவு பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டத்தை டெல்லி அரசால் செயல்படுத்த முடியாது என்றும் தெரிவித்தனர்.


Next Story