ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - டெல்லி துணைநிலை கவர்னர் முடிவு


ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - டெல்லி துணைநிலை கவர்னர் முடிவு
x

கோப்புப்படம்

போலி ஊழல் குற்றச்சாட்டு வெளியிட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க டெல்லி துணைநிலை கவர்னர் முடிவு செய்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி துணைநிலை கவர்னர் சக்சேனா, கடந்த 2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது கதர் கிராம தொழில் ஆணைய தலைவராக இருந்தார். அப்போது அவர் ரூ.1,400 கோடி கருப்பு பணத்தை மாற்றியதாக ஆம் ஆத்மி புகார் கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும், அவர் பதவி விலக வேண்டும் எனவும் சட்டசபையில் அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் போராட்டமும் நடத்தினர். ஆம் ஆத்மியின் இந்த குற்றச்சாட்டை சக்சேனா திட்டவட்டமாக மறுத்து உள்ளார். அத்துடன் இந்த பொய் குற்றச்சாட்டை வெளியிட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் மற்றும் தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக நேற்று அவர் அறிவித்தார்.

மேலும் டெல்லியின் பேச்சுவார்த்தை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் துணைத்தலைவர் ஜாஸ்மின் ஷாவுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.


Next Story