டெல்லி மதுபான கொள்கை வழக்கு; கவிதாவின் ஜாமீன் மனு மீது 6-ந்தேதி தீர்ப்பு


டெல்லி மதுபான கொள்கை வழக்கு; கவிதாவின் ஜாமீன் மனு மீது 6-ந்தேதி தீர்ப்பு
x

ஜாமீன் கோரி கவிதா தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகா் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) தலைவர்களில் ஒருவருமான கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 15-ந்தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில் கவிதாவை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா அனுமதி வழங்கியிருந்தார். இதன்படி கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி கோர்ட்டில் கவிதா மனுத்தாக்கல் செய்திருந்தார்.

கவிதாவின் ஜாமின் மீதான உத்தரவு இன்று பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி கவிதாவின் ஜாமீன் மனு மீது 6-ந்தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story