டெல்லி அமைச்சரவையில் இருந்து மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ராஜினாமா


டெல்லி அமைச்சரவையில் இருந்து மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ராஜினாமா
x

டெல்லி அமைச்சரவையில் இருந்து மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோர் ராஜினாமா செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் உள்ள இரண்டு மந்திரிகள் மணிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயின் ஆகியோரை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் (பாஜக) ராம்வீா் சிங் பிதூரி வலியுறுத்தினாா். மேலும், டெல்லி அமைச்சரவையை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அவா் கோரி இருந்தார். இந்தநிலையில்,

புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்துள்ள நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி மந்திரிகள் மணிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரின் ராஜினாமாவை முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சத்யேந்திர ஜெயின் ஏற்கனவே பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story