குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு


குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு
x

கோப்புப்படம்

குடியரசு தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

டெல்லியில் நாளை 74-வது குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதில் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஏறத்தாழ 65 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டில் தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சந்தைகள், மக்கள்கூடும் இடங்கள், பிற முக்கிய இடங்களில் வெடிகுண்டு செயலிழப்பு படையினர், மோப்ப நாய் படையினைக் கொண்டு பயங்கரவாத தடுப்பு சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது. ஓட்டல்கள், தங்கும் விடுதிகளை போலீஸ் படையினர் சோதனை செய்து வருகிறார்கள். சந்தேகத்துக்கு இடமான நபர் என யாரையாவது கண்டால் உடனடியாக போலீசுக்கு அறிவுறுத்துமாறு ஓட்டல்கள், தங்கும் விடுதி நிர்வாகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களிலும் பாதுகாப்பையொட்டிய விழிப்புணர்வு பிரசாரத்தை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். டெல்லி எல்லைகளிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பு நடைபெறுகிறது. அவற்றில் சிலவற்றில் முக அடையாள அமைப்பும் இணைக்கப்பட்டுள்ளதாக டெல்லி துணை போலீஸ் கமிஷனர் பிரணவ் தயாள் தெரிவித்தார்.


Next Story