2008ம் ஆண்டுக்கு பிறகு டெல்லியில் நவம்பரில் அதிகபட்ச வெப்பம் பதிவு


2008ம் ஆண்டுக்கு பிறகு டெல்லியில் நவம்பரில் அதிகபட்ச வெப்பம் பதிவு
x

தேசிய தலைநகரில் 13 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாதத்தில் 33.5 டிகிரி செல்சியஸ் பதிவானது.

புதுடெல்லி,

டெல்லியில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இது நவம்பர் மாதத்தில் 2008 க்குப் பிறகு அதிகபட்ச வெப்பநிலை என்று வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தேசிய தலைநகரில் 13 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாதத்தில் 33.5 டிகிரி செல்சியஸ் பதிவானது.

அதிகபட்ச வெப்பநிலை பருவத்தின் சராசரியை விட நான்கு புள்ளிகள் அதிகமாக பதிவாகியிருந்தாலும், குறைந்தபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் பருவத்தின் சராசரியை விட மூன்று புள்ளிகள் அதிகமாக இருந்தது.

இதற்கிடையில், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, தேசிய தலைநகரில் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' பிரிவில் பதிவு செய்யப்பட்டது.

செவ்வாய்கிழமை காலையில் மூடுபனி அல்லது மேலோட்டமான மூடுபனிக்கான சாத்தியக்கூறுடன் நாள் முழுவதும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை நிபுணர் கணித்துள்ளார்.

அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 32 மற்றும் 17 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.


Next Story