டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு
டெல்லியில் குரங்கு அம்மை நோய் பாதித்த நபர்களின் எண்ணிக்கை 5- ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் குரங்கு அம்மை பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஆப்பிரிக்காவை சேர்ந்த 22-வயது பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக ஆப்பிரிக்காவை சேர்ந்த இந்த பெண் நைஜிரியா சென்று வந்துள்ளர்.
டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட ஆப்பிரிக்க பெண்ணின் மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வெளியானதில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் குரங்கு அம்மை பாதித்த இரண்டாவது பெண் இவர் ஆவார்.
Related Tags :
Next Story