"உயிரிழந்த தந்தை உயிர்த்தெழ" 2 மாத குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற பெண்

News18
இறந்த தந்தையை உயிர்த்தெழ வைக்கும் முயற்சியில் பெண் ஒருவர் 2 மாத குழந்தையை பலி கொடுக்க முயன்று உள்ளார்.
புதுடெல்லி:
இறந்த தந்தையை மீட்கும் முயற்சியில் பெண் ஒருவர் பிறந்து 2 மாதமே ஆன குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு டெல்லியின் கிழக்கு கைலாஷ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் தந்தை இறந்துவிட்டார். தந்தை மீது பாசம் கொண்ட பெண் குழந்தை ஒன்றை நரபலி கொடுத்தால் தந்தை உயிர்த்தெழுவார் என ஒருவர் கூறிய ஆலோசனையின் பேரில் 2 மாத குழந்தை ஒன்றை கடத்தி உள்ளார்.
ஆனால் போலீசார் அந்த பெண் தனது திட்டத்தை நடைமுறை படுத்துவதற்கு முன்பு குழந்தையை பாதுகாப்பாக மீட்டு உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் நரபலிக்கு முயற்சித்ததை ஒப்புக்கொண்டார்.
Related Tags :
Next Story






