கோபத்தின் முடிவால் பறிபோன உயிர்: கார் பார்க்கிங்கில் தொடர்பாக வெடித்த சண்டை- இளைஞர் பலி


கோபத்தின் முடிவால் பறிபோன உயிர்: கார் பார்க்கிங்கில் தொடர்பாக வெடித்த சண்டை- இளைஞர் பலி
x

உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் பிரபல ஹோட்டல் ஒன்றில் இரண்டு கார்களில் இருவர் உணவருந்த சென்றுள்ளனர்.

புதுடெல்லி,

உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் பிரபல ஹோட்டல் ஒன்றில் இரண்டு கார்களில் இருவர் உணவருந்த சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே கார்களை பார்க்கிங்கில் நிறுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஹோட்டல் ஊழியர்கள் வந்து சமாதானம் செய்ய முயன்றும் தொடர்ந்த வாக்குவாதம்... ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியிருக்கிறது.

அதில் இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் அங்கிருந்த கற்களால் தாக்கிக்கொண்டனர். இவர்களை தடுக்க யாரும் முன்வரவில்லை வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தாக்குதலில் ஒருவர் மயங்கி கீழே விழுந்திருக்கிறார். ஆனாலும், மற்றொருவர் கீழே விழுந்தவரை தொடர்ந்து கற்களாலும், கைகளாலும் தாக்கியிருக்கிறார்.

அதை ஒருவர் தன் செல்போனில் படம் பிடித்திருக்கிறார். கீழே சரிந்தவரை ஆத்திரம் தீர தாக்கிய அந்த நபர், பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர், அக்கம் பக்கத்தினர் தாக்குதலுக்குள்ளான நபரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதைத் தொடந்து, காவல்துறை விசாரணையில், உயிரிழந்தவர் டெல்லி காவல்துறையின் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியின் மகன் அருண் (35) என அடையாளம் தெரியவந்துள்ளது. மேலும், குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

1 More update

Next Story