டெல்லி: போதைப்பொருள் வாங்க பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த மகன்..!
டெல்லியில் போதைப்பொருள் வாங்க பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைதுசெய்தனர்.
புதுடெல்லி,
வடமேற்கு டெல்லியின் சுபாஷ் பிளேஸ் பகுதியில் போதைப்பொருள் வாங்க தந்தை பணம் தராததால், மகனே அடித்துக்கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு சுரேஷ் என்பவர் காதில் ரத்தம் கொட்டிய நிலையில், காயங்களுடன் கிடந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று போலீசார் கூறினர்.
போதை பொருள் வாங்குவதற்கு பணம் தர மறுத்ததால், அஜய் தனது தந்தையை தாக்கியது போலீசாரின் முதற்கட்ட விசாரனையில் தெரியவந்தது.
இதையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அஜய் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீசார் தெரிவித்தார்.
Related Tags :
Next Story