பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு!


பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு!
x
தினத்தந்தி 20 Feb 2023 9:25 AM IST (Updated: 20 Feb 2023 10:17 AM IST)
t-max-icont-min-icon

மேகாலயாவில் நடைபெற இருந்த பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மிசோரம்,

அசாம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியை பிடித்து பலமாக காலூன்றி இருக்கும் பா.ஜ.க. தேர்தலை எதிர்நோக்கியுள்ள மேகாலயா மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், மேகாலயா சட்டமன்ற தேர்தலையொட்டி, பிப்ரவரி 24-ம் தேதியன்று பாஜகவை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய துரா பகுதியில் பி.ஏ.சங்மா அரங்கில் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், மேகாலயாவில் நடைபெற இருந்த பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்திற்கு அம்மாநில அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. துரா பகுதியில் பி.ஏ.சங்மா அரங்கில் உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதனை சுட்டிக்காட்டி பிரசார கூட்டத்துக்கு மேகாலயா அரசு அனுமதி மறுத்துள்ளது.

இதையடுத்து, மேகாலயா பாஜக நிர்வாகி கூறுகையில், பிப்ரவரி 24 பிரதமர் மோடி பேசுவதை யாராலும் தடுக்க முடியாது. மாற்று இடத்தில் பிரச்சார கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.


Next Story