தாஜ்மகாலை பார்வையிட தாய்லாந்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு..!


தாஜ்மகாலை பார்வையிட தாய்லாந்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு..!
x

ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு தாய்லாந்தை சேர்ந்த 6 சுற்றுலா பயணிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர்.

ஆக்ரா:

ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு தாய்லாந்தை சேர்ந்த 6 சுற்றுலா பயணிகள் நேற்று முன்தினம் வந்திருந்தனர். இதில் 3 பேர் பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். முககவசம், கிரீடம் மற்றும் சில உலோக பொருட்களை அவர்கள் வைத்திருந்தனர். அவர்களை தாஜ்மகாலுக்குள் செல்ல பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை. இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பாரம்பரிய உடை அணிந்து வந்ததால் அவர்கள் தாஜ்மகாலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டுகள் கிளம்பியது. ஆனால் இதை தொல்பொருள் ஆய்வுத்துறை மறுத்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அந்த சுற்றுலா பயணிகள் அணிந்திருந்த முககவசம், கிரீடம் மற்றும் உலோக பொருட்களை கழற்றி பாதுகாப்பாளர் அறையில் வைத்து விட்டு செல்ல அறிவுறுத்தியதாகவும், ஆனால் அதை அவர்கள் ஏற்காததால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் பாரம்பரிய உடையில் தாஜ்மகாலில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு எடுக்க வந்திருந்த அவர்கள், அதற்கான அனுமதியை பெறாமல் வந்திருந்ததும் கண்டறியப்பட்டதாக தாஜ்மகால் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.


Next Story