காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வென்ற மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தேவேகவுடா வாழ்த்து


காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வென்ற மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தேவேகவுடா வாழ்த்து
x

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வென்ற மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தேவேகவுடா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார்.

இதைத்தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 9 ஆயிரத்து 915 மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர்.

இந்தநிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தேல்வியடைந்தார். 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தமிழக முதல்-அமைச்சர் தேவேகவுடா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வாகி உள்ள எனது நண்பர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு என்னுடைய இதய பூர்வமான வாழ்த்துக்கள். அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது காங்கிரசுக்கும், கர்நாடகத்திற்கும் வரலாற்று சிறப்புமிக்க தருணம். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் பலத்தை மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடவுள் வழங்கட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story