திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 20 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 20 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 30 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு தரிசனத்துக்காக காத்திருந்தனர். இருப்பினும் நேற்று முன்தினம் 73 ஆயிரத்து 831 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் 20 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இந்தநிலையில் நேற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தரிசன கவுண்ட்டரில் இருந்து வெளியே அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் காத்திருந்தனர்
Related Tags :
Next Story