திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்..!!


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்..!!
x

கோப்புப்படம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் கூட்டம் அலை மோதுவதால் சாமி தரிசனத்துக்கு 12 மணி நேரமாவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர்.

கோடை மற்றும் வாரவிடுமுறை என்பதால் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கோவிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில் நேற்று 59 ஆயிரத்து 71 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 27 ஆயிரத்து 651 பேர் முடி காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. அதில் ரூ.4.12 கோடி காணிக்கையாக கிடைத்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள அறைகள் பக்தர்களால் நிரம்பியது. இலவச தரிசனத்திற்கு 12 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


Next Story