தோனியின் பிறந்த நாள்: 41 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்த ரசிகர்கள்...!


தோனியின் பிறந்த நாள்: 41 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்த ரசிகர்கள்...!
x
தினத்தந்தி 6 July 2022 11:08 AM IST (Updated: 6 July 2022 11:14 AM IST)
t-max-icont-min-icon

தோனியின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் 41 அடி உயர கட்-அவுட்டை ரசிகர்கள் அமைத்துள்ளனர்.

அமராவதி,

கிரிக்கெட் உலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் தான் மகேந்திர சிங் தோனி. தல, மகி என ரசிகர்கள் இவரை செல்லமாக அழைப்பார்கள்.

சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்த தோனி 2007-ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனானார். அவர் தலைமையில் இந்திய அணி 3 ஐசிசி கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. அதோடு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையையும் வென்று இந்தியாவின் கனவை நினைவாக்கினார்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் 41-வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தேனியின் 41 அடி உயர கட்-அவுட்டை ரசிகர்கள் அமைத்து உள்ளார்.


Next Story