சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக தீபங்கர் தத்தா இன்று நியமனம்
மும்பை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி,
மும்பை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் தீபங்கர் தத்தா. அவர் இன்று முறைப்படி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். இதனால், நீதிபதிகளுக்கான மொத்தமுள்ள 34 காலி பணியிடங்களில் 28 பேர் நீதிபதிகளாக பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
அவர்களில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும் அடங்குவார். நீதிபதி தத்தா, மறைந்த முன்னாள் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி சலில் குமார் தத்தாவின் மகன் ஆவார். சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதியான அமிதவா ராய் இவரது உறவினர் ஆவார்.
Related Tags :
Next Story