நான் சுகாதாரத்துறை ஊழியர்களின் நலன்களை புறக்கணித்தேனா?-மந்திரி சுதாகர் விளக்கம்
நான் சுகாதாரத்துறை ஊழியர்களின் நலன்களை புறக்கணித்தேனா? என்பது குறித்து மந்திரி சுதாகர் விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு: நான் சுகாதாரத்துறை ஊழியர்களின் நலன்களை புறக்கணித்தேனா? என்பது குறித்து மந்திரி சுதாகர் விளக்கம் அளித்துள்ளார்.
குற்றச்சாட்டு
கர்நாடக பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஆயனூர் மஞ்சுநாத் எம்.எல்.சி., சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் சரியாக செயல்படுவது இல்லை என்றும், அவர் சுகாதாரத்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலட்சியமாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதற்கு சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புறக்கணிக்கவில்லை
ஆயனூர் மஞ்சுநாத் எம்.எல்.சி., நான் சரியாக செயல்படுவது இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். இது எனக்கு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு என்ன வசதிகள் செய்து கொடுக்க முடியுமோ அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளேன்.
அந்த ஊழியர்களின் நலன்களை புறக்கணிக்கவில்லை. நான் எவ்வாறு செயல்படுகிறேன் என்பது மக்களுக்கும், எனது துறை ஊழியர்களுக்கும் தெரியும். ஊழியர்களின் நலனுக்காக நான் மேற்கொண்ட நடவடிக்கைகள் எனக்கு திருப்தி அளிப்பதாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.