தமிழகத்தில் வட மாநிலத்தவரால் கொரோனா பரவுகிறதா? உ.பி.மந்திரி எதிர்ப்பு


தமிழகத்தில் வட மாநிலத்தவரால் கொரோனா பரவுகிறதா? உ.பி.மந்திரி எதிர்ப்பு
x

தமிழகத்தில் வடமாநில மாணவர்களால் கொரோனா பரவுகிறது என்ற கருத்துக்கு உ.பி.மந்திரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

லக்னோ,

தனியார் கல்வி நிறுவனத்தில் 163 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வடமாநிலத்தில் இருந்து வந்த மாணவர்களால் தொற்று பரவியது கண்டறிப்பட்டுள்ளது. கல்வி நிறுவன வளாகத்தை நேரில் ஆய்வு செய்தோம். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

இந்தநிலையில், நோய், பெருந்தொற்று மாநில எல்லைகளைக்கடந்தவை என்பதை அனுபவப்பூர்வமாக நாம் உணர்ந்துள்ளோம். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து பொறுப்பற்றது என உத்தர பிரதேச முதல்-மந்திரி ஜிதின் பிரசாதா டுவீட் செய்துள்ளார்.


Next Story