டி.கே.சிவக்குமார் நல்ல நடிகர்; சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேட்டி
டி.கே.சிவக்குமார் நல்ல நடிகர் என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூருவில் நேற்றுமுன்தினம் சி.டி.ரவி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் நீலி கண்ணீர் வடித்து நாடகம் ஆடுகிறார். அவருக்கு எந்த ஒரு தேசப்பற்றோ, மக்கள் மீது பற்றோ கிடையாது. டி.கே.சிவக்குமார் நல்ல நடிகர்.
அவர் சினிமாவில் நடித்தால் அவருக்கு நிச்சயம் ஆஸ்கார் விருது கிடைக்கும். தற்போது அவர் ஹீரோவாக நடிக்க முடியாது. இருப்பினும் பெற்றோர்கள் வேடத்தில் நடிக்கலாம்.
அப்படி நடித்தால் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். அவர் நாடகத்தை லேட்டாக ஆரம்பித்தாலும் அவருக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கிறது. அவர் கண்ணீர் வடிப்பது பொதுமக்கள் நலன் கருதி அல்ல, அது வெறும் நாடகம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story