டாக்டர், மரணம் என கைவிரிக்க... 7 மணி நேரத்திற்கு பின் மூதாட்டி உயிருடன் எழுந்த அதிசயம்


டாக்டர், மரணம் என கைவிரிக்க... 7 மணி நேரத்திற்கு பின் மூதாட்டி உயிருடன் எழுந்த அதிசயம்
x

உத்தரகாண்டில் டாக்டர்கள் மரணம் என கைவிரித்த நிலையில் 7 மணிநேரத்திற்கு பின் 109 வயது மூதாட்டி உயிருடன் எழுந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.



டேராடூன்,


உத்தரகாண்டில் ரூர்கீ நகரில் மாங்லூர் பகுதியில் நரசன் குர்த் கிராமத்தில் வசித்து வருபவர் கியான் தேவி (வயது 109). கடந்த சில வாரங்களாக அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜனவரி 31-ந்தேதி அவர் மயங்கி சரிந்து உள்ளார்.

இதனால் பயந்து போன அவரது குடும்பத்தினர் டாக்டர் ஒருவரை அழைத்து சிகிச்சை அளிக்க கேட்டு கொண்டனர். ஆனால், மூதாட்டி உயிரிழந்து விட்டார் என டாக்டர் கூறியுள்ளார்.

இதனால், அவரது குடும்பம் சோகத்தில் ஆழ்ந்தது. உறவினர்கள் இறுதி சடங்குக்கான வேலைகளில் இறங்கினர். பக்கத்து கிராமத்தில் உள்ளவர்கள், அக்கம் பக்கம் உள்ளவர்கள் என ஒருவர் பின் ஒருவராக இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்தனர்.

இதன்பின் மயானத்திற்கு கியான் தேவியின் உடலை எடுத்து செல்ல உறவினர்கள் தயாரானார்கள். அப்போது, கியான் தேவியின் கால் லேசாக அசைந்து உள்ளது.

அதனை உறவினர்கள் சிலர் பார்த்து பயந்து போயுள்ளனர். திடீரென அந்த மூதாட்டி கண் விழித்து பார்த்து அனைவரையும் திகைக்க செய்து விட்டார். மறுபுறம் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

சிலர், அவரிடம் பாட்டி இனிப்பு சாப்பிடுகிறீர்களா? என கேட்டுள்ளனர். அவர் வேண்டாம் என கூறியுள்ளார். அதன்பின்பு, சாட் எனப்படும் மசாலா வகையை சேர்ந்த கார உணவை சாப்பிடுகிறீர்களா? என கேட்டதும் சரி என்று பதிலளித்து உள்ளார்.

அதன்பின் அதனை கொண்டு வந்து கொடுத்துள்ளனர். அவரும் ருசித்து சாப்பிட்டு உள்ளார். காலை 8 மணி அளவில் அவர் மயங்கிய நிலையில், மாலை 3 மணியளவில் உயிருடன் எழுந்து உள்ளார். இதற்கு இடைப்பட்ட 7 மணிநேரம் அவர், உயிரிழந்து விட்டார் என நினைத்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் வந்து, கதறி அழுதபோதும் அவர் எழுந்திருக்காமல் இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.


Next Story