'அயோத்திக்கு செல்ல அழைப்பிதழ் தேவையில்லை' - இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங்


அயோத்திக்கு செல்ல அழைப்பிதழ் தேவையில்லை - இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங்
x

கும்பாபிஷேக விழாவிற்குப் பிறகு அயோத்திக்கு செல்ல இருப்பதாக சுக்விந்தர் சிங் தெரிவித்தார்.

சிம்லா,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு செய்து வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விழாவில் கலந்து கொள்வது குறித்து விரைவில் முடிவு செய்வோம் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அயோத்திக்கு செல்ல அழைப்பிதழ் தேவையில்லை என இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடவுள் ராமர் உத்தம புருஷர் ஆவார். எங்கள் வாழ்க்கை ராமரின் பெயருடன் தொடங்குகிறது. கும்பாபிஷேக விழாவிற்குப் பிறகு நாங்கள் அயோத்திக்கு செல்வோம். அயோத்திக்கு செல்ல அழைப்பிதழ் எதுவும் தேவையில்லை" என்று தெரிவித்தார்.


Next Story