ராஜகால்வாய்களை தூர்வார 15 புகார்கள் வந்துள்ளன


ராஜகால்வாய்களை தூர்வார 15 புகார்கள் வந்துள்ளன
x
தினத்தந்தி 17 Sep 2022 6:45 PM GMT (Updated: 17 Sep 2022 6:45 PM GMT)

ராஜகால்வாய்களை தூர்வார பதினைந்து புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

பெங்களூரு:


பெங்களூருவில் கழிவுநீரை வெளியேற்றுவதில் ராஜ கால்வாய்களின் பங்கு அதிகம். இவைகள் பெங்களூரு மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கால்வாய்களை தூர்வாருவது, சீரமைப்பது போன்ற பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ராஜ கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் தான், பெங்களூருவில் பல பகுதிகள் நீரில் மூழ்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பெங்களூருவில் உள்ள ராஜகால்வாய்களை தூர்வார மாநகராட்சியிடம் இந்த ஆண்டில் மட்டும் 15 புகார்கள் வந்துள்ளது. கடந்த ஆண்டில் 12 புகார்கள் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த புகார்களுக்கு அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.


Next Story