குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி


குட்டையில் மூழ்கி   2 சிறுவர்கள் பலி
x

குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானார்.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் குஷ்டகி தாலுகா ராம்புரா கிராமத்தை சேர்ந்தவர்கள் மகாந்தேஷ் (வயது 9) மற்றும் விஜய் (9). இவர்கள் 2 பேரும் வீட்டில் உள்ள மாடுகளை அந்த பகுதியில் உள்ள கல்குவாரி குட்டைக்கு அழைத்து சென்றனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த மேலும் 2 சிறுவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் 4 பேரும் சேர்ந்து மாடுகளை குளிப்பாட்டி கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென குட்டையின் ஆழமான பகுதிக்கு அவர்கள் 4 பேர் சென்றதாக கூறப்படுகிறது. இதில் மகாந்தேஷ் மற்றும் விஜய் ஆகிய 2 பேர் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மற்ற 2 பேரும் நீந்தி கரை சேர்ந்தனர். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அனுமசாகர் போலீசார் 2 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story