கலபுரகியில் மீண்டும் நிலநடுக்கம்; பொதுமக்கள் பீதி
கலபுரகியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சின்சோலி தாலுகாவில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தஸ்தாபூர், ஒசஹள்ளி, சுலேபேட்டை கிராமங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டது. மேலும் அந்த வாரத்தில் மட்டும் 10 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த பகுதியினர் கூறினர்.
ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலையில் கலபுரகி மாவட்டம் சின்சோலி தாலுகாவில் உள்ள கடிகேஸ்வரி கிராமத்தில் நேற்று மாலையில் பயங்கர சத்தத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 5 நிமிடங்கள் தொடர்ந்த இந்த நிலநடுக்கத்தால் கிராம மக்கள் பீதி அடைந்தனர். மேலும், வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
Related Tags :
Next Story