புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது டெல்லியில் திடீர் நில அதிர்வு
டெல்லியில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டது.
டெல்லி,
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டு நிறைவடைந்து 2023-ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது.
2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், நாடு முழுவதும் மக்கள் குடும்பத்துடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்து மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது டெல்லியில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. நள்ளிரவு 1.19 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் அரியானாவின் ஜஹ்ஜர் நகரில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உணரப்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது டெல்லியில் திடீரென நில அதிர்வு உணரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.