பசுவதையை நிறுத்தினால் பூமியின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்: குஜராத் கோர்ட் கருத்து


பசுவதையை நிறுத்தினால் பூமியின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்: குஜராத் கோர்ட் கருத்து
x

பசுவின் சாணத்தால் கட்டப்படும் வீடுகள் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டால் கூட பாதிப்பு அடையாது என்று குஜராத்தின் தபி மாவட்ட கோர்ட் நீதிபதி வழக்கு ஒன்றின் போது கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பசுக்களை சட்ட விரோதமாக கடத்திய வழக்கில் குற்றம் சாட்டபட்ட நபருக்கு ஆயுள் தண்டனையை குஜராத்தில் உள்ள தபி மாவட்ட நீதிமன்றம் விதித்தது. இந்த வழக்கில் தீர்ப்பை அளித்த போது நீதிபதி சில கருத்துக்களையும் கூறினார். அதில், பசுவதையை நிறுத்தினால் பூமியில் உள்ள அனைத்து பிரச்சினகளும் தீர்ந்து விடும். பசுவின் சாணத்தால் கட்டப்படும் வீடுகள் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டால் கூட பாதிப்பு அடையாது.

தீர்க்க முடியாத பல நோய்களுக்கு பசுவின் சிறுநீர் அருமருந்தாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார். இந்த தகவலை லைவ் லா இணையதளம் வெளியிட்டுள்ளது. நீதிபதியின் இந்த கருத்து வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. ஏனெனில், இதற்கான அறிவியல் பூர்வ சான்றுகள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story