இலவசங்கள் குறித்த தேர்தல் வாக்குறுதி; நிதி ஆதாரங்களை விளக்க- கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு


இலவசங்கள் குறித்த தேர்தல் வாக்குறுதி; நிதி ஆதாரங்களை விளக்க- கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 4 Oct 2022 3:55 PM IST (Updated: 4 Oct 2022 4:02 PM IST)
t-max-icont-min-icon

அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிக்கான நிதி ஆதாரத்தையும் வாக்காளர்களிடம் விளக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

புதுடெல்லி,

தேர்தலின் போது அரசியல் கட்சிகள் இலவசங்களை வாக்குறுதியாக அளித்து வருகின்றன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள், தேர்தல் ஆணையம் உள்பட பல்வேறு தரப்பிடம் சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை என கூறி வழக்கை 3 பேர் கொண்ட அமர்வுக்கு சுப்ரீம் கோர்ட்டு மாற்றியுள்ளது.

இந்நிலையில், தேர்தல் வாக்குறுதிக்கான நிதி ஆதாரம் திரட்டப்படுவது எவ்வாறு என்பது குறித்த உண்மை தகவலை அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு விளக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள பரிந்துரை கடிதத்தில், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக போதிய தகவல்கள் விளக்கப்படமாமல் இருத்தல், இந்த வாக்குறுதிகளால் நிதி நிலைத்தன்மையின் மீது ஏற்படும் விரும்பத்தகாத தாக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள முடியாது.

தேர்தலின்போது அளிக்கப்படும் வாக்குறுதிக்கான நிதி ஆதாரத்தை அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு விளக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story