டெல்லியில் அமித்ஷாவை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி


டெல்லியில் அமித்ஷாவை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 20 Sept 2022 9:57 AM IST (Updated: 20 Sept 2022 10:09 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை இன்று காலை 11 மணிக்கு எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சென்னை,

அ.தி.மு.க.வில் பொதுக்குழு நடத்தி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு கூறியது.

அதேபோல் அ.தி.மு.க. தலைமை அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் அவருக்கு சாதமாகவே சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வெளியானது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார்.

இந்த நிலையில் டெல்லியில் இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை இன்று காலை 11 மணிக்கு எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதிமுகவில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story