இந்தியாவில் கல்வி என்பது தர்மம், வியாபாரம் அல்ல - ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி சுரேஷ் பையாஜி ஜோஷி
நமது சமூகம் பல்வேறு சக்திகளின் பங்களிப்புடன் இயங்குவதாக சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்தார்.
ஜெய்ப்பூர்,
கல்வி வணிகமயமாக்கப்படுவது குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில இந்திய நிர்வாகியான சுரேஷ் பையாஜி ஜோஷி கவலை தெரிவித்துள்ளார். இந்தியாவில் கல்வி என்பது விற்பதற்கான வியாபாரம் அல்ல , அது தர்மமாகும் என்றும் ஜோஷி கூறியுள்ளார். பாரத் விகாஸ் பரிஷத் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் இன்று அவர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மேலும் பேசிய அவர் கூறியதாவது :
நாட்டில் கலைக்கு சிறந்த இடம் கிடைத்துள்ளது, ஆனால் இதன் மூலம் இப்போது சமூகத்தில் மாசு பரவுகிறது, அதை சரிசெய்ய வேண்டும். இந்திய சிந்தனை ஒருபோதும் சுயநலமாக இருந்ததில்லை. இந்திய முனிவர்களும் அறிஞர்களும் எங்கு சென்றாலும் அறிவை எடுத்துச் சென்றுள்ளனர்.
நமது சமூகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு சக்திகளின் பங்களிப்புடன் இயங்குகிறது. அறிஞர்கள், தொழிலதிபர்கள் மற்றும் உழைப்பாளிகள் நாட்டை முன்னேற்றுவதற்கு பங்களித்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.