அடுத்த மாதம் சட்டசபை தேர்தல்: திரிபுரா வன்முறை குறித்து தேர்தல் கமிஷன் அறிக்கை கேட்கிறது
பா.ஜனதா ஆட்சி நடக்கும் திரிபுராவில் அடுத்த மாதம் 16-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
அகர்தலா,
பா.ஜனதா ஆட்சி நடக்கும் திரிபுராவில் அடுத்த மாதம் 16-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதை கடந்த 18-ந் தேதி தேர்தல் கமிஷன் அறிவித்ததை தொடர்ந்து, திரிபுராவில் அரசியல் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
காங்கிரஸ் நடத்திய மோட்டார் சைக்கிள் பேரணி மீது தாக்குதல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் வீட்டுக்கு தீவைப்பு, கொலை போன்ற சம்பவங்கள் நடந்தன. ஆளும் பா.ஜனதா மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. தேர்தல் கமிஷனிடமும் புகார் தெரிவித்தன.
இந்தநிலையில், இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து தலைமை செயலாளர் மூலமாக போலீஸ் டி.ஜி.பி.யிடம் விசாரணை அறிக்கையை பெற்று தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்குமாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரி கிரண் கிட்டிக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story