கர்நாடகத்தில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது


கர்நாடகத்தில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
x

கர்நாடகத்தில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

பெங்களூரு: கா்நாடகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு, கர்நாடக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் கோரிக்கை வைத்திருந்தது. அதாவது ஒரு யூனிட்டுக்கு 38 காசு முதல் 55 காசுகள் வரை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதனை ஏற்று கர்நாடகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த அரசும் அனுமதி வழங்கியது. அதன்படி, ஜூலை 1-ந் தேதியில் இருந்து (அதாவது நேற்று) மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.


இந்த நிலையில், கர்நாடக அரசு அறிவித்தபடி நேற்று மின்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. அதாவது ஒரு யூனிட்டுக்கு 19 முதல் 31 காசுகள் உயர்த்தப்பட்டு இருக்கிறது. கர்நாடகத்தில் மின் கட்டணம் உயர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.


Next Story