பஸ் நிறுத்தத்திற்கு வழங்கிய நிலம் ஆக்கிரமிப்பு


பஸ் நிறுத்தத்திற்கு வழங்கிய நிலம் ஆக்கிரமிப்பு
x

பஸ் நிறுத்ததிற்கு வழங்கிய நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நில உரிமையாளர் கோரிக்கை வைத்துள்ளார்.

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவர் தனது கிராமத்தில் பஸ் நிறுத்தம் இல்லை என கூறி, தன்னுடைய நிலத்தை தானமாக வழங்கினார். அந்த நிலத்தில் பஸ் நிறுத்தம் கட்டப்பட்டது. இந்த நிலையில், பஸ் நிறுத்தம் கட்டியது போக மீதி உள்ள நிலத்ைத அந்தப்பகுதியை சேர்ந்த காபி தோட்ட உரிமையாளர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த மஞ்சுநாத், பஸ் நிறுத்தத்துக்கு வழங்கிய நிலத்தை காபி தோட்ட உரிமையாளர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். இதனால் அந்த ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக கிராம பஞ்சாயத்து தலைவர் நாராயண் என்வரை சந்தித்தும் புகார் அளித்துள்ளார். மேலும் நிலத்தை மீட்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story