பங்குச்சந்தை விவகாரம் - விசாரணை தேவை: மல்லிகார்ஜூன கார்கே
பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தி உள்ளார். மேலும் கூட்டுக்குழு அல்லது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கண்காணிப்பில் ஒரு குழு விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து எல்.ஐ.சி, எஸ்பிஐ மற்றும் பிற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்வதால் மக்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை இழக்கின்றனர். கோடிக்கணக்கான இந்தியர்கள் உழைத்து சம்பாதித்த பணத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வது குறித்து விவாதிக்க விதி 267ன் கீழ் வணிக அறிவிப்பை நிறுத்தி வைத்துள்ளோம். உண்மையை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என கூறினார்.
Related Tags :
Next Story