மடத்துக்குள் புகுந்து ஸ்படிக லிங்கம் திருட்டு
மடத்துக்குள் புகுந்து ஸ்படிக லிங்கத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
ஹாவேரி: ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா லிங்கதஹள்ளி பகுதியில் சித்தலிங்க கிரேமடம் உள்ளது. இங்கு ஸ்படிக லிங்கம் இருந்தது. இதனை மடாதிபதி வீரபத்ர சிவச்சார்யா அந்த லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டு வந்தார். பழமையான இந்த ஸ்படிக லிங்கம் 8-ம் நூற்றாண்டை சேர்ந்தது. இந்த நிலையில் அந்த மடத்தின் மடாதிபதி நேற்று முன்தினம் பல்லாரி மாவட்டம் கோட்டூர் சென்றிருந்த நிலையில் மர்மநபர்கள், ஸ்படிக லிங்கத்தை திருடிச் சென்றுவிட்டனர்.
இதுதொடர்பாக மடாதிபதி, ராணிபென்னூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மடத்தில் இருந்து ஸ்படிக லிங்கத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story