இ.எஸ்.ஐ. திட்டத்தில் இருந்து வெளியேறியவர்களுக்கு புதிய சலுகை


இ.எஸ்.ஐ. திட்டத்தில் இருந்து வெளியேறியவர்களுக்கு புதிய சலுகை
x

இ.எஸ்.ஐ திட்ட பலன்களில் இருந்து வெளியேறிய காப்பீட்டு ஓய்வூதியம் பெற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவப் பலன்களை வழங்குவதற்காக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் இ.எஸ்.ஐ.சி.யின் 193-வது தேசிய கூட்டம் நடந்தது. மத்திய மந்திரி பூபேந்திர யாதவ் தலைமையேற்றார். கூட்டத்தில் காப்பீடு செய்யப்பட்டு ஓய்வு பெற்ற நபர்களுக்கு தளர்வான விதிமுறைகளுடன் மருத்துவ பலன்களை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஊதிய உச்சவரம்பை கடந்ததால், இ.எஸ்.ஐ திட்ட பலன்களில் இருந்து வெளியேறிய காப்பீட்டு ஓய்வூதியம் பெற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவப் பலன்களை வழங்குவதற்காக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏப்ரல் 1, 2012-க்கு பிறகு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் காப்பீடு செய்து கொண்டு வேலையில் இருந்தவர்கள் மற்றும் ஏப்ரல் 1, 2017 அன்று அல்லது அதற்கு பிறகு மாதத்திற்கு ரூ.30,000 வரை ஊதியத்துடன் பணி ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு பெற்ற நபர்கள் இந்த புதிய திட்டத்தின் கீழ் பயனடைவார்கள்.


Next Story