பனிபொழிவையும் பொருட்படுத்தாமல் ராகுல்காந்தியுடன் யாத்திரையில் உற்சாகமாக கலந்து கொண்ட பெண்கள்...!


கடுமையான பனிமூட்டத்துக்கு இடையே ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

கவுகாத்தி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ந்தேதி இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் வழியே கடந்து சென்றுள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை டெல்லியின் லோனி பகுதி வழியே உத்தர பிரதேசத்தில் அவரது யாத்திரை நுழைந்தது. அதன்பின்பு, அவரது யாத்திரை கடந்த புதன் கிழமை மாவிகலா பகுதியில் இருந்து பராத் பகுதிக்கு சென்றது. தொடர்ந்து பாக்தத் பகுதியையும் கடந்து சென்றது. இந்த யாத்திரையில் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் உடன் கலந்து கொண்டார். கடந்த 6-ந்தேதி மீண்டும் அரியானாவுக்குள் யாத்திரை நுழைந்தது. அரியானாவின் குருசேத்ராவை இந்த யாத்திரை நேற்று வந்தடைந்தது.

இந்தநிலையில், இந்த யாத்திரை அரியானாவில் உள்ள கான்பூரின் கோலியன் பகுதியில் இருந்து காலை மீண்டும் தொடங்கியது.

தற்போது வடமாநிலங்களில் கடும் பனிபொழிவு நிலவி வருகிறது. இந்த பனிபொழிவு காரணமாக அரியானா மாநிலத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இருந்த போதிலும் காலையில் வாகன விளக்குகள் ஒளி பனிமூட்டத்துக்கு இடையில் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்கியது. ராகுல் காந்தியுடன் பெண்கள் பலர் யாத்திரையில் கலந்து கொண்டனர். இந்த யாத்திரை வருகிற 26-ந் தேதி காஷ்மீரில் யாத்திரை நிறைவடைய இருக்கிறது.


Next Story