நாட்டின் கண்ணியத்திற்கு எதிரான ஒவ்வோர் அடிக்கும், பதிலடி தரப்படும்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு


நாட்டின் கண்ணியத்திற்கு எதிரான ஒவ்வோர் அடிக்கும், பதிலடி தரப்படும்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு
x

நாங்கள் ஒருபோதும் எந்தவொரு நாட்டின் மீதும் படையெடுத்ததும் கிடையாது, அடிமைப்படுத்தியதும் இல்லை என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் தேசிய தொழில்நுட்ப தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 2047-ம் ஆண்டுக்கான ஒரு குறிப்பிட்ட இலக்குகளை நாம் கொண்டிருக்கிறோம். நமது நாட்டை நாம் வளர்ச்சி அடைந்த நாடாகவும், சுய சார்புடைய ஒன்றாகவும் உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என கூறினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி அல்லது நீடித்த வளர்ச்சி இலக்குகள் அல்லது புதிய கண்டுபிடிப்புகளுக்காக, எல்லாவற்றையும் உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்புக்கான நடைமுறையை உருவாக்குவது என ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தொழில் நுட்பம் முக்கியம் வாய்ந்தது என பேசியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது, இந்தியா தனக்கான அமைதியை விரும்புவது மட்டுமின்றி, உலகிற்கும் ஒரு செய்தியை தெரிவித்து உள்ளது.

தொலைநோக்கு பார்வையாளர்களான கடவுள் புத்தர் மற்றும் தேச தந்தை மகாத்மா காந்தி ஆகியோர் உலகத்திற்கு இந்தியா அளித்த பரிசு ஆகும்.

நாங்கள் ஒருபோதும் எந்தவொரு நாட்டின் மீதும் படையெடுத்தது கிடையாது. அடிமைப்படுத்தியதும் இல்லை. ஆனால், 1998-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனையானது, இந்தியா, வசுதேவ குடும்பம் மற்றும் அகிம்ச பரமோ தர்மம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட அமைதி விரும்பும் ஒரு நாடு.

எனினும், தனது இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றுக்கு யாரையும் தீங்கு செய்ய அனுமதிக்காது. நாட்டின் கண்ணியத்திற்கு எதிரான ஒவ்வோர் அடிக்கும், பதிலடி தரப்படும் என்று பேசியுள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்கு அறிவியலின் முக்கியத்துவம் பற்றி சுட்டி காட்டிய அவர், அதனை ஆற்றலின் மூலம் என கூறியுள்ளார். இந்தியாவின் தொழில் நுட்ப சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் பேசியதுடன், அறிவியல் ரீதியான அணுகுமுறையை கைகொள்ள தேசிய தேசிய தொழில்நுட்ப தினம் ஓர் உந்துதலாக இருக்கும் என்றும் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது குறிப்பிட்டார்.


Next Story