இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனுக்கு திடீர் நெஞ்சுவலி


இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனுக்கு திடீர் நெஞ்சுவலி
x

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பெங்களூரு:-

இஸ்ரோ முன்னாள் தலைவர்

பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்(இஸ்ரோ) தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் கஸ்தூரி ரங்கன். இவர் தேசிய கல்வி கொள்கை குழு தலைவராகவும் பணியாற்றி உள்ளார். இந்த நிலையில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு சென்றார்.

ஆனால் அங்கு சென்ற சில மணி நேரங்களில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக 'விமான ஆம்புலன்ஸ்' மூலம் இலங்கையில் இருந்து மாலை 5 மணி அளவில் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை

பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் தடையில்லா போக்குவரத்து வாயிலாக பெங்களூருவில் உள்ள நாராயணா ஹிருதயாலயா தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர் தேவி ஷெட்டி தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது கஸ்தூரி ரங்கன் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து கஸ்தூரி ரங்கனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாக டாக்டர்கள் கூறினர்.


Next Story