பஞ்சாப் முன்னாள் மந்திரி கைது


ஊழல் குற்றச்சாட்டின்பேரில் பஞ்சாப் முன்னாள் மந்திரி பாரத் பூஷன் அஷுவை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

சண்டிகர்,

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் உணவு மற்றும் விநியோகத் துறை மந்திரியாக இருந்தவர் பரத் பூஷன் அஷு. இவரது பதவிக் காலத்தில் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

அதனடிப்படையில், இவரை இன்று மொஹாலியில் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ஜூன் மாதம், முன்னாள் மந்திரியும் காங்கிரஸ் தலைவருமான சாது சிங் தரம்சோட்டை ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

பஞ்சாபில் பகவந்த் மன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. டெல்லிக்கு பிறகு, பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது.


Next Story