சுதந்திர தின விழா கொடியேற்றத்தின் போது மயங்கி விழுந்த முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு
75 வது சுதந்திரதின விழா கொடியேற்றத்தின் போது திடீரென மயங்கி விழுந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உயிரிழந்தார்.
மங்களூரு:
கர்நாடக மாநிலம் தட்சினகன்னடா மாவட்டம் கடபா தாலுகா குற்றபாடி பஞ்சாயத்தில் உள்ள பழைய ஸ்டேஷன் அமிர்த சரோவர் அருகே நடந்த கொடியேற்றத்தின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது .
முன்னாள் தலைவர் என். கருணாகரா கொடி ஏற்றுவதற்கு தயாராகி கொண்டிருந்த போது, அங்குநின்றிருந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கங்காதர கவுடா கொடி வணக்கத்தை தெரிவித்தார். கொடியேற்றத்திற்கு தயாராகி கொண்டிருந்த போது கங்காதர கவுடா, மயங்கி விழுந்தார். உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Related Tags :
Next Story