அதிக ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்புவருங்கால வைப்புநிதி நிறுவனம் அறிவிப்பு
கடைசி தேதியை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று ஊழியர்கள், நிறுவனங்கள், ஊழியர் சங்கங்கள் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.
புதுடெல்லி,
2014-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதிக்கு முன் தொழிலாளர் வைப்புநிதி பயனாளிகளாக இருந்தவர்கள் அதிக பங்களிப்பு தொகை மூலம் அதிக ஓய்வூதியத்தொகை பெற விண்ணப்பிக்க முடியாமல் போய்விட்டால் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது.
இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (மே 3-ந் தேதி) முடிவடைய இருந்தது.
இந்நிலையில் கடைசி தேதியை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று ஊழியர்கள், நிறுவனங்கள், ஊழியர் சங்கங்கள் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.
எனவே தகுதியுள்ள அனைவரும் ஓய்வூதியத்தை உயர்த்திக்கொள்ள வாய்ப்பு வழங்கும்வகையில் இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அடுத்த மாதம் (ஜூன்) 26 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது என தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓய்வூதிய தொகையை உயர்த்திக்கொள்வதற்கு இதுவரை 12 லட்சத்துக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.