கர்நாடகத்தில் கனமழை எச்சரிக்கை; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
கர்நாடகாவில் கடலோர பகுதிகளில் மிகக் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தின் குடகு,தக்ஷின கன்னடா, உடுப்பி மற்றும் உத்தர கன்னடா பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தீவிரப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் "இந்திய வானிலை மையத்தின் கணிப்புப் படி கர்நாடகத்தின் குடகு,தக்ஷின கன்னடா, உடுப்பி மற்றும் உத்தர கன்னடா பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்" என்றார்.
Related Tags :
Next Story