மியான்மர்- வங்கதேச எல்லையில் கரையக் கடந்தது மோக்கா புயல்! 210 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது

image tweeted by @WMO
"மிகவும் தீவிரமான" புயலாக மோச்சா, மியான்மர்-வங்காளதேச கடற்கரையில் கரையைக் கடந்தது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
புதுடெல்லி,
மோக்கா புயல் வடக்கு திசையில் நகர்ந்து நேற்று முன் தினம் மிகத் தீவிர புயலாக மாறி மத்திய மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்தது.
இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெற்று அதி தீவிர புயலாக வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையை கடந்தது. என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.
அப்போது மணிக்கு 180 கி.மீ. முதல் 190 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 210 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசியத்என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு மியான்மர்-வங்காளதேசக் கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து பெய்தது.மோக்கோ புயல் அச்சுறுத்தல் காரணமாக வங்காளதேசம் மற்றும் மியான்மரில் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.கடந்த 20 ஆண்டுகளில் வங்கதேசத்தை தாக்கும் மிக சக்திவாய்ந்த மோக்க என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.






